Enable Javscript for better performance
வேன், பேருந்து விபத்து: சிகிச்சை பலனின்றி இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேன், பேருந்து விபத்து: சிகிச்சை பலனின்றி இருவர் சாவு

    By அவிநாசி  |   Published on : 17th April 2015 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி அருகே புதன்கிழமை இரவு பனியன் நிறுவன வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த இரு பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    அவிநாசி புதிய பேருந்து நிலையம், கைகாட்டி அருகே உள்ள பனியன் நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் வேலை முடிந்து 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவிநாசியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

    வேன், அவிநாசியை அடுத்த சீனிவாசபுரம் அருகே சென்றபோது, மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தும், வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

     இதில், வேனில் பயணம் செய்த பனியன் நிறுவனத் தொழிலாளர்களான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த உமாவதி (18), துர்காதேவி (20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

     இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உமாவதி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். துர்க்காதேவி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து, அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai