Enable Javscript for better performance
நெற் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    நெற் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்

    By வெள்ளக்கோவில்  |   Published on : 10th December 2015 06:58 AM  |   அ+அ அ-   |    |  

    வெள்ளக்கோவில் வட்டாரத்தில் நெற் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் பரவலாகத் தென்படுவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சீனிராஜ் கூறியது: 

    இந்த வட்டாரத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இலை சுருட்டுப் புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த தழைச்சத்து உரமிட்டு, இயற்கை மருந்து அசாடிராக்டின் ஹெக்டேருக்கு 200 மி. தெளிக்க வேண்டும். அதிகளவிலான தாக்குதலுக்கு கார்டாப் பவுடர் அல்லது குளோர்பைரிபாஸ் பயன்படுத்த வேண்டும்.

     மேலும் தண்டுத் துளைப்பான், புகையான் பூச்சி, குலை நோய் பாதிப்புக்களையும் சரியான சமயத்தில் தடுக்க வேண்டும். நெல் வயலில் எப்பொழுதும் இருக்கும் அதிக ஈரப்பதம் பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலுக்குக் காரணமாக உள்ளது. தொடர் கண்காணிப்பின் மூலம் பயிர் பாதுகாப்பு இன்றியமையாததாகும். இது குறித்த விவரங்களுக்கு வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai