Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் ரூ.1.47 கோடி மதிப்பில் வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் ரூ.1.47 கோடி மதிப்பில் வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

    By உடுமலை  |   Published on : 27th January 2015 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உடுக்கம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் 7 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

    இப்பள்ளியில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் ஏழு வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. இதற்காக பள்ளி வளாகத்தில் பூமிபூஜை நடைபெற்றது.

    மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு பூமிபூஜை செய்து இப்பணியைத் தொடங்கி வைத்தார். அதிமுக ஒன்றியச் செயலாளர் கே.ஆறுச்சாமி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆர்.ஜி.ஜெகநாதன், ஊராட்சித் தலைவர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உடுமலை அருகே பூலாங்கிணறு அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கும் இதே தினத்தில் பூமிபூஜை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai