Enable Javscript for better performance
உடுமலைப் பகுதியில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில்

    66-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி முதல்வர் கேப்டன் டி.எஸ்.ஸ்ரீதரன் தேசியக் கொடியேற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தனி வட்டாட்சியர் கே.தயானந்தன் தேசியக் கொடியேற்றி வைத்தார். வருவாய்த் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சித் தலைவர் கேஜி. எஸ்.ஷோபனா தேசியக் கொடியேற்றி வைத்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், நகராட்சி ஆணையாளர் கண்ணையா(பொ), துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குட்டைத் திடலில் உள்ள காந்தி சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம், ஜிவிஜி மகளிர் கல்லூரி, வித்யாசாகர் கல்லூரி, ராகல்பாவி துவக்கப் பள்ளி, நெல்லுக்கடை வீதி நடுநிலைப் பள்ளி, சின்னபொம்மன் சாலை அரசுப் பள்ளி, பூலாங்கிணறு மேல்நிலைப் பள்ளி, ஜேஎஸ்ஆர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அலுவலகத்தில் குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai