Enable Javscript for better performance
கருப்புத்தாள்களைக் கொடுத்து பணம் மோசடி: மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கருப்புத்தாள்களைக் கொடுத்து பணம் மோசடி: மூவர் கைது

    By திருப்பூர்,  |   Published on : 27th January 2015 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருப்புத்தாள்களைக் கொடுத்து பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்ய முயன்றதாக மூன்று பேரை திருப்பூர் ஊரக போலீஸார் கைது செய்தனர்.

    திருப்பூர் அவிநாசி சாலை ஆசர் மில் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி பூவாத்தாள் (54). இவரை, கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (39), தியாகராஜன் (68), திருப்பூர் கல்லூரிச் சாலையைச் சேர்ந்த கருணாகரன் (63) ஆகிய மூன்று பேர் சேர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் சந்தித்துள்ளனர்.

    அப்போது, அவர்கள் வைத்திருந்த கருப்புத்தாள்கள் சிலவற்றை ரசாயனத்தில் போட்டு, வெளியே எடுத்தனர். அந்த கருப்புத்தாள்கள் பணமாக மாறியதாக் கூறி, ரூ.2 லட்சம் கொடுத்தால் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள இந்த நூதன கருப்புத்தாள்களை தருவதாக பூவாத்தாளிடம் அந்த நபர்கள் கூறினராம். இதை, உண்மையென நம்பிய பூவாத்தாள், அவர்களுக்கு பணம் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பூவாத்தாள், ரூ.2 லட்சத்துடன் அந்த நபர்கள் கூறியபடி, ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பூர் காங்கயம் சாலை நல்லிக்கவுண்டன்புதூர் பகுதிக்கு சென்றார்.

    அங்கு, சாலையோரத்தில் காரில் காத்திருந்த அந்த 3 நபர்களிடம் பூவாத்தாள் பணத்தை கொடுத்தார். அச்சமயத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஊரகப் போலீஸார் சந்தேகத்தின் பேரில் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். போலீஸார் காரை சோதனையிட்டபோது அதில் ரூ. 2 லட்சம், 9 கட்டுகளுடன் கருப்புத்தாள்கள், ரசாயனப் பாட்டில்கள் ஆகியவை இருப்பது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், 3 நபர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்டதாக இந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட செந்தில்குமார், கருணாகரன் ஆகிய இருவரும் ஏற்கெனவே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai