Enable Javscript for better performance
கோவிலூரில் கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மூலனூர் அருகே எம்.கருப்பன்வலசு ஊராட்சிக்கு உள்பட்ட கோவிலூரில் திங்கள்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ஊராட்சித் தலைவர் கே.எஸ்.முத்துக்குமார் வரவேற்றார். விற்பனைக் குழு முன்னாள் தலைவர் வி.பி.பெரியசாமி, கோட்டாட்சியர் சரவணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசியதாவது: அடிப்படைத் தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்டவை தாய் திட்டம் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தனி நபர் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனி நபர் கழிப்பறைத் திட்டம், நூறு நாள் வேலை உறுதித் திட்டம், ஆடு, மாடு கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார். கிராம சபை முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai