Enable Javscript for better performance
தமாகா செயல்வீரர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

    திருப்பூர் யூனியன் மில் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூடத்துக்கு முன்னாள் எம்பி எஸ்.கே.கார்வேந்தன் தலைமை வகித்தார்.

    முன்னாள் ஆவின் தலைவர் ராஜகோபால், கட்சியின் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் சந்திரசேகர், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பார்த்தசாரதி, ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன்கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரப் பொறுப்பாளர் ரவிக்குமார் வரவேற்றார். கோவை பொறுப்பாளர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ விடியல்சேகர், நிர்வாகிகள் பொன்சேதுபதி, முத்துராமலிங்கம், முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் பேசினர்.

    இதில், பிப்ரவரி 24-ஆம் தேதி பல்லடம் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்ட கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது. நிர்வாகி ஜெயாமுத்துசாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai