Enable Javscript for better performance
ஆன்லைனில் சில்லறை வர்த்தகத்தைத் தடை செய்ய சட்டதிருத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஆன்லைனில் சில்லறை வர்த்தகத்தைத் தடை செய்ய சட்டதிருத்தம்

    By திருப்பூர்  |   Published on : 28th January 2015 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆன்லைனில் சில்லறை வர்த்தகத்தை தடை செய்ய சட்டதிருத்தம் தேவை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, திருப்பூரில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

    சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, உணவு பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க பிப்ரவரி 4-ம் தேதி வரை கெடு

    உள்ளது. எனினும், மத்திய அரசு இதுவரை வணிகர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை. இதற்கிடையே, மத்திய அரசு அதிகாரிகளை நேரடியாக அனுப்பி ஆய்வு

    செய்வதுடன், வணிகர்களுக்கு மறைமுகமாக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில்

    அனைத்து வணிகர்களையும் திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும்.

    குடியரசு தின விழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பெருமுதலீட்டு நிறுவன உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்தொடர்ச்சியாக, இந்திய

    முதலாளிகளுடன் இணைந்து அந்நிய நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இது சில்லறை வர்த்தகத்தில் எந்தவகையிலாவது பாதித்தால், அதனை

    எதிர்த்து நாடு தழுவிய அளவில் வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும்.

    சில்லறை வர்த்தகத்தில் பெருமுதலீட்டு நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என வர்த்தகத்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்திய பெரு நிறுவனம்

    ஒன்று, மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. காலப்போக்கில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக,

    வணிகர் சங்கங்கள் ஆய்வு செய்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் இதேபோல் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் கடையை வணிகர்கள் அடைத்து

    உடைத்துள்ளனர். தமிழகத்திலும் அந்நிறுவனம் சில்லரை வர்த்தகம் செய்தால், அதே நிலைதான் ஏற்படும்.

    ஆன்லைனில் சில்லரை வர்த்தகம் செய்வதைத் தடை செய்திட சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மத்திய வர்த்தக

    இணை அமைச்சர் நிர்மலாசீதாராமன் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,

    ஆன்லைனில் சில்லரை வர்ததகம் புரிந்து வரி ஏய்ப்பு செய்ததாக தனியார் நிறுவனம் மீது கேரள மாநில அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் வரி, அபராதம் விதித்துள்ளது.

    இத்தகைய நடவடிக்கையை மற்ற மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு மே மாதம் சென்னையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க நடவடிக்கை

    எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    அப்போது, மாநில இணைச்செயலர் டி.கணேசன், மாநில துணைத் தலைவர் பாலநாகமாணிக்கம், திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai