Enable Javscript for better performance
ஊரக வேலை உறுதித் திட்ட முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வேலை உறுதித் திட்ட முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    By திருப்பூர்  |   Published on : 28th January 2015 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர், ஜன. 27: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு முடக்குவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் காங்கிரஸ்

    கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு சார்பில் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் எஸ்சி பிரிவு மாநகர் மாவட்டத் தலைவர்

    பி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில அமைóபபாளர் டி.செல்வக்குமார், மாநில துணைத் தலைவர் எம்.ராஜேந்திரன், ஆலோசகர் என்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை

    வகித்தனர்.

    மாநில ஆலோசகர் திருமகன் ஈ.வெ.ரா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட எஸ்சி பிரிவு கௌரவ ஆலோசகர் ப.கோபி, மாநில பொதுச்

    செயலாளர் வி.எம்.தங்கவேல், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன், புறநகர் மாவட்டத் தலைவர் ஏ.வெங்கடாசலம் ஆகியோர் விளக்கமளித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்கிய மத்திய அரசு, தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக

    வேலையுறுதித் திட்டத்தையும் முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், கிராமப்புற பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள் பெருமளவில்

    பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று

    வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    ஐஎன்டியுசி திருப்பூர் மாவட்டச் செயலர் செந்தில், பொதுச்செயலர் பி.கே.என்.தண்டபானி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஏ.பி.முத்துசாமி, டி.டி.கே.சித்திக் உள்பட

    ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai