Enable Javscript for better performance
காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் உணவு பாதுகாப்புத் துறை

    அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் தலைமையில் அலுவலர்கள் முருகேஷ், தங்கவேல் ஆகியோர் பழைய

    பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அங்குள்ள கடையொன்றில் 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டுகள் வரை காலாவதியான சுமார் 70 குளிர்பான பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது

    கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் ஹோட்டல் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட

    குளிர்பானங்களின் மாதிரிகளை சோதனைக்காக சென்னைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai