Enable Javscript for better performance
கொலை வழக்கு: மதுரையை சேர்ந்தவருக்கு ஆயுள்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் அருகே நடந்த கொலை வழக்கில் மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் கந்தசாமி (48), மதுரை ஆணையூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் கணேசன் (40). இவர்கள் மீது பல்வேறு திருட்டு

    வழக்குகள் உள்ளன. இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சிறையிலிருந்து வெளியே

    வந்த பிறகு, இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதன்படி, திருப்பூர் பகுதியில் திருடுவதற்காக அவர்கள் கடந்த 2011 அக்டோபர் 25-ம் தேதி இரவு மதுரையிலிருந்து திருப்பூருக்கு பேருந்தில் வந்துள்ளனர். அப்போது,

    கணேசனிடம் இரும்பு ராடும், கந்தசாமியிடம் அரிவாளும் இருந்துள்ளது. வரும் வழியில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதை அடுத்து திருப்பூர்

    பொல்லிக்காளிபாளையம் பகுதியில் அவர்களை நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளார். தொடர்ந்து, அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது மீண்டும் ஏற்பட்ட

    பிரச்னையில் கந்தசாமிதான் வைத்திருந்த அரிவாளால் கணேசனை வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச் சம்பவம் தொடர்பாக, அவிநாசிபாளையம் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர். இவ் வழக்கு விசாரணை திருப்பூர்

    முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு இறுதி விசாரணை நீதிபதி எஸ்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட

    கந்தசாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai