Enable Javscript for better performance
சீனிவாசா பள்ளி விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை, ஜன. 27: உடுமலை, காந்தி நகர், சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

      பள்ளித் தாளாளர் விக்னேஷ்ரங்கநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வர் டி.என்.ஸ்ரீதரன்

    தேசியக்கொடியேற்றி வைத்தார். பள்ளி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார்.

     இதில், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்

    வழங்கப்பட்டன. மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில்,  382 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வாயு அணி வென்றது. மாணவர்களின் யோகா, கராத்தே,

    சிலம்பம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    கடந்தாண்டு பள்ளி அளவில் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், மாநில, மாவட்ட அளவில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் இவ்விழாவில் சிறப்பு பரிசுகள்

    வழங்கப்பட்டன.  பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பங்காருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேலாளர் டி.ஜவஹர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர்

    செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai