Enable Javscript for better performance
ஜல்லிபட்டியில் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை, ஜன. 27: உடுமலையை அடுத்துள்ள ஜல்லிபட்டி, 4-ஆவது வார்டு பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவேண்டுமென அம்பேத்கர்

    இளைஞர் முன்னணி வலியுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் ஜல்லிபட்டி ஊராட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஜல்லிபட்டி, 4-ஆவது வார்டுக்கு உள்பட்ட புதுக் காலனி

    பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இப்பகுதியில் மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவி

    வருகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்தப் பகுதியில் திறந்தவெளிக் கிணறு உள்ளது. இதற்குள் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. எனவே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றவும், திறந்தவெளிக்

    கிணற்றை மூடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai