Enable Javscript for better performance
தாராபுரத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் - Dinamani

சுடச்சுட

    

    தாராபுரத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

    By தாராபுரம்  |   Published on : 28th January 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாராபுரம்  நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் ஞா.கலாவதி தலைமை வகித்தார். ஆணையர் கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஞா.கலாவதி பேசியது:

    தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகளிலும் புதிதாக பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள 12 தொட்டிகள் மூலம் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு

    குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரூ. 14.5 கோடி மதிப்பில் 3 புதிய தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    வரும் மார்ச் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவு செய்து தருவதாக ஒப்பந்ததாரர்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai