Enable Javscript for better performance
திருப்பூர் எழுத்தாளருக்கு தமிழக அரசு நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர், ஜன.27: திருப்பூரைச் சேர்ந்த இலக்கிய எழுத்தாளரும், தொல்லியல் ஆய்வாளருமான கவிஞர் எஸ்.சிவதாசனுக்கு தமிழக அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒருவர்

    வீதம் வயது முதிர்ந்த தமிழ் எழுத்தாளர் அல்லது தமிழக அறிஞர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

    இதன்படி, நிகழாண்டு நிதியுதவி பெறும் தமிழ் அறிஞர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, அண்மையில் அவர்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான சான்றிதழ்கள்

    சென்னையில் அளிக்கப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்துக்கு திருப்பூர் பெருமாநல்லூர் சாலை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கவிஞர் எஸ்.சிவதாசனுக்கு (68) நிதியுதவி

    பெறுவதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1954ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த இவர், தொடர்ந்து பல்வேறு புத்தகங்களையும், மரபு கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். திருப்பூர்

    வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து கவிஞர் எஸ்.சிவதாசன், திருப்பூர் பகுதியில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

    இதன்மூலம், தொல்லியல் மற்றும் முதுமக்கள் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரது "கொங்கு நாட்டு குளங்கள்

    வரலாறு' என்ற புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் 2005ம் ஆண்டுக்கான சிறந்த இலக்கிய விருது அளித்துள்ளது. தற்போது தமிழக அரசின் அகவை முதிர்ந்த

    தமிழறிஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள கவிஞர் சிவதாசனுக்கு ஏப்ரல் முதல் மாதந்தோறும் ரூ.2000ம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai