Enable Javscript for better performance
நகராட்சிக்கு புதிதாக 32 குப்பை சேகரிப்பு வண்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சிக்கு புதிதாக 32 குப்பை சேகரிப்பு வண்டிகள்

    By வெள்ளக்கோவில்  |   Published on : 28th January 2015 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     வெள்ளக்கோவில் நகராட்சிக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 32 குப்பை சேகரிப்பு வண்டிகள் செவ்வாய்க்கிழமை துப்புரவுப் பணிக்கு ஒப்படைக்கப்பட்டன.

     நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி பணியாளர்களுக்கு புதிய வண்டிகளை வழங்கினார்.  இதுகுறித்து நகராட்சி ஆணையர் கி.சுந்தரேசன் தெரிவித்ததாவது:

     நகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  வீடு, வீடாகச் சென்று தனித்தனியாக மக்கும் குப்பை, மக்காத

    குப்பைகளைச் சேகரிப்பதற்காக 22 தள்ளு வண்டிகளும், கழிவு நீர் கால்வாய் கழிவுகளை அகற்றுவதற்காக 10 வண்டிகளும் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு

    ரூ.6.12 லட்சமாகும் என்றார்.

     நகர் மன்ற உறுப்பினர் டி.பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai