Enable Javscript for better performance
நகராட்சி சந்தையில் விவசாயிகளுக்கு தனி இடம் ஒதுக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி சந்தையில் விவசாயிகளுக்கு தனி இடம் ஒதுக்கக் கோரிக்கை

    By தாராபுரம்  |   Published on : 28th January 2015 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி சந்தையில் விவசாயிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

    தாராபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை இருப்பு

    வைத்து விற்பனை செய்ய தனிஇடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது.

    ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஏ.காளிமுத்து

    தலைமையில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து, முன்னாள் நகராட்சி ஆணையர் மற்றும் கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்து விவசாயிகளுக்கு ஒப்படைப்பதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் தற்போது புதிய ஆணையர் விவசாயிகளுக்கு நகராட்சி இடத்தை வாடகைக்கு மட்டுமே அளிக்க முடியும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஏ.காளிமுத்து தலைமையில் விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சியர்

    அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு இடத்தை வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் நகராட்சி நிர்வாகத்திடம்

    ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai