Enable Javscript for better performance
நல்லாறு மூடப்படும் அபாயம்: விவசாயிகள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    நல்லாறு மூடப்படும் அபாயம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

    By திருப்பூர்  |   Published on : 28th January 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் அருகே உள்ள நல்லாறு சிறுகசிறுக ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நல்லாறு இல்லாத நிலை

    ஏற்படும் என்று திருப்பூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர் சார்-ஆட்சியர் கே.செந்தில்ராஜ் தலைமையில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,

    திருப்பூர் கோட்டத்துக்குள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு துறை அதிகாரிகள்

    பங்கேற்றனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகே உள்ள நல்லாற்றில் கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றை

    பலமுறை சமன்ப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை, பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ஆட்சியர் வருவதால், சமன் செய்வதாகக்

    கூறுகின்றனர். ஆட்சியர் வந்து சென்ற பிறகு, அந்த இடங்களில் கட்டடக் கழிவுகள், ஆலை கழிவுகளைக் கொட்டப்படுகிறது. பிறகு மீண்டும் ஆட்சியர் வருவதாகக் கூறி, ஆறு

    சமன் செய்யப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் நல்லாறு என்பது காணாமல் போகும் அபாயம் நிலவுகிறது. நதிநீர் இணைப்பில் அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தின்

    ஒருபகுதியான நல்லாற்று பாதுகாத்திட வேண்டும். அதற்கு நல்லாறு முதலில் தூர்வார அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக விலைக்கு விற்பதற்காக முத்திரைதாள் தீர்ந்துவிட்டதாக கூறி 50 சதம் வரை விலை அதிகரித்து முகவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை

    புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. முத்திரைதாள் தட்டுப்பாட்டை நீக்கவும், ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தின் கருவூலம் வாயிலாக அதற்கு

    ஒரு தனி மையம் ஏற்படுத்தி முத்திரைதாள் விற்பனை செய்திடவும் வேண்டும்.

    திருப்பூர் தெற்கு வட்டம் முதலிபாளையம் ஊராட்சி விருப்பணகவுண்டன்பாளையத்துக்கு மேற்குபுறம் உள்ள தென்னைமரத்தோட்டம் என்ற பகுதியில் சிலர் பாறைகளை

    வெடி வைத்து உடைத்து கற்களை விற்று வருகின்றனர். பாறையில் வெடி வைக்கும்போது, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்படுகிறது. இதுகுறித்து

    முதலிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அப் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொங்கலூர் ஒன்றியம் கணபதிபாளையத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த ஆழ்குழாய் கிணறு வறண்டு விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால்

    குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கணபதிபாளையம் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் இப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சார்-ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai