Enable Javscript for better performance
பல்லடத்தில் மனித நேய வார விழா- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம், ஜன. 27: திருப்பூர் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில், மனித நேய வார விழா பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை

    நடைபெற்றது.

    விழாவுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் நீலகுமார் வரவேற்றார்.

    விழாவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசியது:

    குழந்தைகள் பெற்றோர்களின் சொல்படி கேட்டு நடந்தால் பிற்கால வாழ்வு சிறப்பாக இருக்கும்.  எல்லோரும் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நல்லதை

    நினைத்து எல்லோருக்கும் நல்லதே செய்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கோபம், பொறாமை இருக்கும்பட்சத்தில் வாழ்க்கையில் அமைதி போய்விடும் என்றார்.

     காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் சுரேஷ்குமார் (பல்லடம்), ராஜேந்திரன்(தாராபுரம்), பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai