Enable Javscript for better performance
பள்ளிகளில் இந்தி கற்பிக்க இமக வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்தி கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி (தமிழகம்) வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, அக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பாலாஜி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் திருப்பூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் செவ்வாய்க்கிழமை

    மனு அளித்தனர்.

    அதில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளை கட்டாயமாகக்

    கற்பிக்கவும், இந்தி பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு முதல் மொழியாக தமிழையும், இரண்டாம்

    மொழியாக இந்தியையும் படிக்கக் கோரி பல்வேறு வகையில் விளம்பரங்கள் செய்திட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் சரவணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஆர்.பாப்பாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai