Enable Javscript for better performance
பவானியில் நகராட்சி நிலத்தை காய்கறி சந்தைக்கு ஒதுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பவானியில் நகராட்சி நிலத்தை காய்கறி சந்தைக்கு ஒதுக்க வலியுறுத்தல்

    By திருப்பூர்  |   Published on : 28th January 2015 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர், ஜன. 27: பவானியில் தனியாருக்கு குத்தகைக்குவிட திட்டமிட்டுள்ள நகராட்சி நிலத்தை காய்கறி சந்தை அமைக்க ஒதுக்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள்

    வலியுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் பவானியில் தினசரி காய்கறி சந்தை தற்போது பவானி காவிரி ஆற்றோர பகுதியிலும், மயானம் அருகேயும் செயல்பட்டு வருகிறது. இப் பகுதிகளில்

    நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, பவானி புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனியாருக்கு குத்தகைக்குவிட

    நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இóந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பவானி வட்டார காய், கனி தினசரி மார்கெட்

    வியாபாரிகள் சங்கம் சார்பில் காய்கறி வியாபாரிகள் சுமார் 150 பேர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநரும் (பொறுப்பு), திருப்பூர் மாநகராட்சி ஆணையருமான

    எம்.அசோகனிடம் மனு அளிக்க செவ்வாய்க்கிழமை திருப்பூருக்கு வந்தனர்.

    தொடர்ந்து, அவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி ஆணையர் அசோகன் இல்லாததால், மாநகராட்சி செயற்பொறியாளர்

    தமிழ்ச்செல்வன், காய்கறி வியாபாரிகளை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்கள் கூறியது: பவானி தினசரி காய்கறி சந்தையை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அமைத்துக்

    கொடுத்தால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். எனினும், நகராட்சி அதிகாரிகள் கொடுத்த சில தவறான வழிகாட்டுதல்கள்

    அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் அந்த நிலத்தை தனியாருக்கு குத்தகைக்குவிட தீர்மானித்துள்ளது என்றனர்.

    இதுதொடர்பாக மனுவையும் அவர்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி செயற்பொறியாளர், இதுகுறித்து மாநகராட்சி ஆணையருக்கு

    தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai