Enable Javscript for better performance
போலீஸார் போல் நடித்து இளைஞர் மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸார் போல் நடித்து இளைஞர் மீது தாக்குதல்

    By திருப்பூர்  |   Published on : 28th January 2015 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர், ஜன. 27: திருப்பூரில் போலீஸ் போல் நடித்த மூவர், இளைஞரை தாக்கி பணம் பறிக்க முயன்றனர்.

    திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சரவணன் (எ) தமிழ்செல்வன்(27). இவர் அவிநாசி சாலை 15வேலம்பாளையம் பகுதியிலுள்ள பனியன்

    நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழ்செல்வனை

    செரங்காடு அருகே எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் மறித்துள்ளனர்.

    தொடர்ந்து, தங்களை போலீஸார் என அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர்கள், தமிழ்ச்செல்வனிடம் மோட்டார் சைக்கிள் ஆவணங்களை காட்டும்படி கேட்டுள்ளனர்.

    இதன்படி, அவர் கொடுத்த ஆவணங்களை பார்வையிட்ட அந்த நபர்கள், இது போலி ஆவணம் எனக் கூறியதுடன், அபராதமாக ரூ.2500 செலுத்த வேண்டும் என்றும்

    கூறினர்களாம். இதையடுத்து, அசல் ஆவணங்கள் நிறுவனத்தில் இருப்பதாக தெரிவித்த தமிழ்ச்செல்வன், தனது நண்பரை கொண்டு வரச்சொல்வதாகக் கூறி

    செல்லிடப்பேசியை எடுத்துள்ளார்.

    உடனடியாக அந்த நபர்கள் செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டதால், சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வன் உண்மையான போலீஸ் இல்லை எனக் கூறி வாக்குவாதம்

    செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அருகே இருந்த இரும்பு கம்பியால் தமிழ்ச்செல்வனின் கழுத்து, வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடி விட்டனராம்.

    பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய தமிழ்ச்செல்வனை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்த்தனர்.  தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் அளித்த

    புகாரின்பேரில் திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai