Enable Javscript for better performance
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற சிறப்பு வழிபாடு

    By அவிநாசி  |   Published on : 15th April 2016 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற வேண்டி, மேட்டுப்பாளையத்திலிருந்து பவானி தீர்த்தம் எடுத்து வந்து அவிநாசி மக்கள் வியாழக்கிழமை பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற வேண்டி, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு பவானி தீர்த்தம் எடுத்து வர அவிநாசியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். இதில், அவிநாசி உள்ளிட்ட  7 சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்றனர்.

    தீர்த்தம் எடுத்து வரப்பட்டு காரமடை, அன்னூர், அவிநாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, பெருந்துறை, சென்னிமலை, சேவூர், தொரவலூர், அப்பியாபாளையம், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai