Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் பெருமாநல்லூரில்... - Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, மக்கள் நலக் கூட்டணி சார்பில் பெருமாநல்லூரில் அவரது உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பெருமாநல்லூர் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார். மதிமுக ஒன்றியச் செயலாளர் வி.கே.சந்திரமூர்த்தி, தேமுதிக ஒன்றியச் செயலாளர் வி.நாச்சிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.மகேந்திரன், தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் ஒ.கே.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதையடுத்து, அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் சண்முகம், தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai