Enable Javscript for better performance
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

    By திருப்பூர்  |   Published on : 15th April 2016 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் அருகே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தவர்கள் கைது செய்யப்படாததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

    தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட முத்தியம்பட்டி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில்  உள்ள மதுரை வீரன் கோயிலில் தாரை தப்பட்டை அடிக்கக் கூடாது எனவும், பொதுச் சாலையில் நடக்கக் கூடாது எனவும் வேறு ஜாதியினர் மிரட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் குண்டடம் காவல் துறையில் கடந்த 10 நாள்களுக்கு முன் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வேறு ஜாதியைச் சேர்ந்த 4 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களைக் கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதில், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai