Enable Javscript for better performance
இன்னும் தீரல...- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறித் தொழில் மேம்படுத்தப்படுமா?

    பல்லடத்தில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, விசைத்தறி ஜவுளி விற்பனைச் சந்தை, காய்கறிகளைப் பாதுகாக்க குளிர் பதனக் கிடங்கு, கோழி இறைச்சியை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான குளிர்பதனக் கிடங்கு வசதி ஆகியவை ஏற்படுத்தி தரவேண்டும்.

    பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பல்லடம் - மங்கலம் சாலையை விரிவுபடுத்தி கூடுதல் பேருந்து இயக்குதல், பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருப்பதால் புறவழிச்சாலை அமைத்தல், வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் அமைக்க இடம் ஒதுக்குதல், பல்லடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைத்தல் ஆகியவை நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.

    இந்தத் தொகுதி முழுவதும் மயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை விளை நிலங்களில் பயிர்களை நாசம் செய்து விடுவதால், மயில்களை பாதுகாக்க பல்லடத்தில் மயில்களுக்கான சரணாலயம் அமைக்க வேண்டும். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வரும் இத்தொகுதியில் அத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இத்தொழிலை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பல்லடம் தொகுதி முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai