Enable Javscript for better performance
உடுமலை தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

    By உடுமலை  |   Published on : 15th April 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.க.முத்துவை மாற்றக்கோரி அக்கட்சியினர் பெதப்பம்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக மு.க.முத்து போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை புதன்கிழமை அறிவித்தது. இதனால், உடுமலை திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், மு.க.முத்துவை மாற்றக்கோரி கட்சித் தலைமைக்கு பேக்ஸ் அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், வேட்பாளர் மு.க.முத்துவை மாற்றக் கோரி, உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

    உடுமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.க.முத்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். உடுமலை தொகுதியில் பொதுமக்களுக்கும் குறிப்பாக திமுக நிர்வாகிகளுக்கும் எந்த அறிமுகமும் இல்லாதவர். ஆகையால், உடுமலை தொகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai