Enable Javscript for better performance
பல்லடம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள் - Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

    By dn  |   Published on : 17th April 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

    பல்லடம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பல்லடம் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

    பல்லடம் தொகுதியில் 67 இடங்களில் புதிதாக பகுதி நேர, முழு நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 42 கிராமங்களுக்கு புதிய பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சின்னியகவுண்டன்பாளையத்தில் ரூ.2.65 கோடி மதிப்பில் கோழி ஆராய்ச்சி மையம் அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டடம் உள்ளிட்ட ரூ.40 கோடி மதிப்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கம், காரணம்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வழியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகச் செயல்பாடு இல்லாமல் இருந்த பொங்கலூர் அரசு விதைப் பண்ணை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு இரண்டாவது குடிநீர்த் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மூன்றாவது குடிநீர்த் திட்டத்தின்கீழ் ரூ.43 கோடி மதிப்பில் கரைப்புதூர், கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், முதலிபாளையம், மங்கலம், இடுவாய் பகுதிக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தெற்குபாளையம், மாதப்பூர் பகுதியிலிருந்து கோவை பிரதான சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்துக்கு அருகில் புறவழிச் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 6 இடங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் குளிர்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.பல்லடம், காமநாயக்கன்பாளையத்தில் காவலர் குடியிருப்பு, காவல் நிலையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விசைத்தறி சைசிங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீதம் வாட் வரி நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விசைத்தறித் துணிகளுக்கு விதிக்கப்பட்ட 4 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளது. அனுப்பட்டி, புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம் பகுதியில் இருமுனை மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்ததை மும்முனை மின்சாரமாக மேம்படுத்தி தரப்பட்டுள்ளது. பல்லடம் நகரில் ரூ.20 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட்டுள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai