Enable Javscript for better performance
ஓய்வூதியர்களுக்கு ஆதார் எண் பெற நினைவூட்டல்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கு ஆதார் எண் பெற நினைவூட்டல்

    By திருப்பூர்  |   Published on : 15th April 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆதார் எண் பெற்றுக் கொள்ளுமாறு நினைவூட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்டக் கருவூல அலுவலர் ஜானகி வெளியிட்ட அறிக்கை:

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை ஆதார் எண்ணுக்குப்புகைப்படம் எடுக்காத அனைத்து ஓய்வூதியர்களுக்குமான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அந்தந்த  வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இந்த முகாமைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் ஆதார் எண் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai