Enable Javscript for better performance
காவல் உதவி ஆய்வாளர் உடையணிந்து வங்கியில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவல் உதவி ஆய்வாளர் உடையணிந்து வங்கியில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

    By திருப்பூர்  |   Published on : 15th April 2016 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் உடையணிந்து தனியார் வங்கிக் கிளையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

    திருப்பூர், பெருமாநல்லூர் சாலை, மும்மூர்த்தி நகர் பகுதியில் தனியார் வங்கிக் கிளை  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு காவல் உதவி ஆய்வாளர் உடையணிந்தவர் புதன்கிழமை காலை வந்துள்ளார். அங்கு ரூ.4 கோடி பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி வங்கிப் பணியாளர்களிடம் அதுகுறித்து விளக்கமும் கேட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, தனக்குப் பிறந்த நாள் என்று கூறிய அவர், வங்கியில் உள்ள பணியாளர்கள் 6 பேருக்கு கேக் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியதால் அந்த நபர் அங்கிருந்து வெளியேறினார்.

    இத்தகவலறிந்த வங்கிக் கிளை மேலாளர், திருப்பூர் தலைமை அலுவலக நிர்வாகிகள் வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளைபோகவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அப்போது வங்கிக் கிளையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலமாக அந்த நபரின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த என்.விஜயகோபால் (49) என்பதும், அவர் பெருமாநல்லூர் சாலையில் கடை வைத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai