Enable Javscript for better performance
குடிமங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குடிமங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    By உடுமலை  |   Published on : 15th April 2016 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டார்.

    அப்போது உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

    குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெரும் வகையில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருமூர்த்திமலை கூட்டுக் குடிநீர்த் திட்டப் ப ணிகள் முடிவுரும் தருவாயில் உள்ளது. கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்றார்.

    பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, மாவட்ட கவுன்சிலர் தமயந்தி, ஊராட்சி செயலாளர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai