Enable Javscript for better performance
சித்திரைத் திருநாள்: அவிநாசி கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    சித்திரைத் திருநாள்: அவிநாசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By அவிநாசி  |   Published on : 15th April 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்திரைத் திருநாளையொட்டி, அவிநாசி பகுதியில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    சித்திரை முதல் நாளையொட்டி, புதன்கிழமை இரவு, பொதுமக்கள் தங்கள் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி முன் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், தங்க நகைகள், பணம் ஆகியவைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில், கருவலூர் மாரியம்மன் கோயில், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில், சேவூர் வாலீஸ்வரர் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai