Enable Javscript for better performance
சிவன்மலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு - Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில், காங்கயம், திருப்பூர், படியூர், வெள்ளக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், காங்கயத்தை அடுத்துள்ள காடையூர் காடையீஸ்வரர் கோயில், மடவிளாகம் ஆருத்ரகபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில்கள், பாப்பினி பெரியநாயகி அம்மன் கோயில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில், காங்கயம் நகரம்-பழையகோட்டை சாலையில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோயில், பேட்டை மாரியம்மன் கோயில், பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்க்கையம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai