Enable Javscript for better performance
நஞ்சியம்பாளையத்தில் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நஞ்சியம்பாளையத்தில் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டம்

    By தாராபுரம்  |   Published on : 15th April 2016 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தில் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி முன்னிலை வகித்தார். இதில், கிராம விழிப்புணர்வுக் குழுக்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவுக்கு வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளுதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மேலும், இக்கூட்டத்தில் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஆட்சியர் ச.ஜெயந்தி கூறியதாவது:

    மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் தண்ணீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai