Enable Javscript for better performance
பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்- Dinamani

சுடச்சுட

    

    தாராபுரம் அருகே பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
    தாராபுரம், நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் இளவரசன் (16), நவீன்குமார் (17), மனோஜ்குமார் (17). இவர்கள், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். தாளக்கரையைச் சேர்ந்தவர்கள் கபிலன், புவனேஷ் உள்ளிட்ட 6 மாணவர்கள் தாராபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    இந்த மாணவர்கள் ஒரே அரசுப் பேருந்தில் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அமரவிருப்பம் தெரிவித்து, அவர்களை வேறு இருக்கைக்கு செல்லுமாறு கூறினராம். இதற்கு பாலிடெக்னிக் மாணவர்கள் உடன்படவில்லையெனத் தெரிகிறது. இதையடுத்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்களைத் தாக்கியதில் 3 பாலிடெக்னிக் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
    அவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தாராபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai