Enable Javscript for better performance
7 பேரை ஏமாற்றி திருமணம்: பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    தாராபுரத்தில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம் பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கோப்பனகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் செல்வகுமார் (32). இவருக்கும் பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த மாரியம்மாள் என்கிற பவித்ராவுக்கும் (25) கடந்த 2015-இல் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், கடந்த மே மாதம் பவித்ரா நகை மற்றும் பணத்துடன் மாயமானார். இதுகுறித்து செல்வகுமார் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பவித்ரா பல்வேறு பெயர்களில் உடுமலையைச் சேர்ந்த கர்ணன், பழனியைச் சேர்ந்த செந்தில், செல்வகுமார் உள்பட 7 பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது.

    இதையடுத்து உடுமலை அருகே பதுங்கி இருந்த பவித்ராவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai