Enable Javscript for better performance
எல்.ஆர்.ஜி. கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் மீண்டும் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    எல்.ஆர்.ஜி. கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் மீண்டும் தொடக்கம்

    By திருப்பூர்  |   Published on : 21st May 2016 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கலைக் கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் கடந்த மே 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்ணப்ப விநியோகம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. முதல் நாளில் மாணவிகள் பலரும் பெற்றோருடன் வந்து கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai