Enable Javscript for better performance
"அறம் சார்ந்த கல்விதான் அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்ட தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில்  ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிக் கருத்தரங்கம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் கே.கிருஷ்ணன் வரவேற்றார். இதில், காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஏ.கலியமூர்த்தி பேசியதாவது:
    புத்தகத்தைப் படிக்க அதிக நேரம் தலைகுனிகிறவர், வாழ்க்கையில் அதிக அளவு தலைநிமிர்கிறார். கல்வி அறிவு இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடையாது. நாளைய சமுதாயத்தை அறிவுசார்ந்தாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். கல்வித் துறையில் நாம் முன்னனேறி வருகிறோம். நாட்டுக்கு பொருள் சார்ந்த கல்வி தேவையில்லை. அறம் சார்ந்த கல்விதான் தேவை.ஆசிரியர் பணி அறம் சார்ந்தது என்றார்.  இதில், ஏ.எஸ்.கே.ஜெரால்ட் கனகரத்தினம், சங்கப் பொருளாளர் ஏ.கார்த்திகேயன் உள்பட 700 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சங்கச் செயலாளர் எம்.நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai