Enable Javscript for better performance
ஆடை உற்பத்தித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை: பின்னலாடைத் துறையினர் அறிக்கை சமர்ப்பி- Dinamani

சுடச்சுட

    

    ஆடை உற்பத்தித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை: பின்னலாடைத் துறையினர் அறிக்கை சமர்ப்பிப்பு

    By DIN  |   Published on : 28th November 2016 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆடை உற்பத்தித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரிடம் பின்னலாடைத் துறையினர் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் தில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் சனிக்கிழமை இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், பின்னலாடை துறை சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கலந்து கொண்டு, பின்னலாடைத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான அம்சங்கள் குறித்த தொகுப்பு அறிக்கையை மத்திய நிதியமைச்சரிடம் வழங்கினார்.
    அந்த கூறப்பட்டுள்ள சில அம்சங்களின் விவரம்:
    கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வகுத்துள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்கது. பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு ப்ரீபெய்டு கார்டு மூலமாக சம்பளம் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, சம்பளம் வழங்குவதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
    மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆடை உற்பத்தித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின்னலாடைத் துறைக்கென சர்வதேசத் தரத்தில் டிசைனர் ஸ்டுடியோ, ஆய்வு மையம், தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புத் துறைக்கான ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.
    தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், விடுதி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பின்னலாடைத் துறைக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பின்னலாடைக்கு குறைந்தபட்ச வரி விதிக்க வேண்டும். மேக் இன் இந்தியா, ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் திட்டங்களை திறம்பட செயல்படுத்த பின்னலாடைத் துறை சிறந்த களமாக உள்ளது. புதியவர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பது போல், பணியில் உள்ள தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.
    தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு, அந்த முதலீட்டை செலவினமாக எடுத்து, வருமான வரி செலுத்துவதில் தளர்வு அளிக்க வேண்டும். காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்திக் கட்டமைப்புகளுக்கான முதலீட்டுத் தொகையை செலவினமாகக் கணக்கிடும் காலம் முடிய உள்ளது. அதை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
    ஜவுளித் துறை அமைச்சரிடம் சமர்ப்பிப்பு... இதே போல் கோவை வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் பின்னலாடை துறையின் தேவைகள் குறித்த தொகுப்பை சனிக்கிழமை வழங்யுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai