Enable Javscript for better performance
கட்டி முடித்தும் திறக்கப்படாத துணை சுகாதார நிலையம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம் அருகே, காங்கயம்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் உள்ளது.
    காங்கயம் தாலுகா, வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சடையபாளையம், பொன்னாங்காளிவலசு, மேட்டுப்பாறை, சம்பந்தம்பாளையம், பண்ணாடிபுதூர், காட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காங்கயம்பாளையம் பகுதியில் புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    இது கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும்கூட, இன்னும் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கர்ப்பிணிகள் மருத்துவச் சிகிச்சைக்காக சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள காங்கயம், ஊதியூர் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    எனவே, இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையிலும், அருகிலேயே மருத்துவ வசதி கிடைக்கும் வகையிலும் காங்கயம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai