Enable Javscript for better performance
கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
    காங்கயத்தை அடுத்துள்ள பட்டக்காரன்புதூரைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி மல்லிகா (50). மகள் பாரதி (20). இந்நிலையில், மல்லிகா தனது மகளுடன் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் காங்கயத்தில் இருந்து தங்களது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பாரதி ஓட்டிசென்றுள்ளார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்து கொண்டிருந்த 4 மர்ம நபர்கள் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி மல்லிகா அணிந்திருந்த 5 பவுன் நகை, பாரதி அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
    இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai