Enable Javscript for better performance
பொக்லைன் ஓட்டுநர் விபத்தில் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    ஈரோடு மாவட்டம், சிவகிரி கோட்டக்காட்டுவலசைச் சேர்ந்தவர் கார்த்தி (32). இவர், வெள்ளக்கோவிலில் பொக்லைன் ஓட்டுநராக வேலை செய்துவந்தார்.
    இந்நிலையில், இவர் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது, முத்தூர் சாலையில் குமராண்டிசாவடி அருகே இந்த இருசக்கர வாகனம் டிராக்டர் மீது மோதியது. இவ்விபத்தில், கார்த்தி அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai