Enable Javscript for better performance
வறட்சிப் பகுதிகளில் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வறட்சிப் பகுதிகளில் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2016 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    திருப்பூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ச.ஜெயந்தி முன்னிலை வகித்தார். மாவட்டக் கண்காணிப்பு அலுவலரான அரசு நிதித் துறைச் செயலர் (செலவினம்) பி.செந்தில்குமார் தலைமை வகித்தார்.
    இதில், திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறைவான அளவே பெய்துள்ளதால் விவசாயம் மற்றும் குடிநீர்ப் பிரச்னைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைப் பணிகள் மற்றும் பிற திட்டப் பணிகள் செயலாக்கம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    முன்னதாக,  திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் வள்ளிபுரத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் விருமாண்டம்பாளையம் பகுதியிலும் சோளம், நரிப்பயிர், ஆமணக்கு, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களையும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் விவசாயிக்கு வழங்கப்பட்டிருந்த புல் வெட்டும் கருவியினையும் ஆட்சியர், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்னராமசாமி, சார் ஆட்சியர்கள் ஜெ.ஷ்ரவன்குமார்,  க்ரேஸ் பட்சாவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் குருநாதன், மாநகராட்சி தனி அலுவலர் எம்.அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai