Enable Javscript for better performance
பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
    திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் அக்டோபர் 7-ஆம் தேதி காலை 10 முதல் பகல் ஒரு மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர்க்கும் நாள் முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவுள்ளதாக மாவட்ட நிóர்வாகம் தெரிவித்துள்ளது.
    அதன்படி, அவினாசி வட்டத்தில் வேலாயுதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், திருப்பூர் வடக்கு வட்டத்தில் பொங்குபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருப்பூர் தெற்கு வட்டத்தில் முத்தனம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், ஊத்துக்குளி வட்டத்தில் சுண்டக்காம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், பல்லடம் வட்டத்தில் வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் பொன்னேரி கிராம நிர்வாக அலுவலகம், மடத்துக்குளம் வட்டத்தில் ஏ.கே.புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம், தாராபுரம் வட்டத்தில் பொன்னாபுரம் கிராம நிர்வாக அலுவலகம், காங்கயம் வட்டத்தில் கத்தாங்கன்னி கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
    முகாமில் கிராம மக்கள் புதிய குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் திருத்தம் போன்ற குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai