Enable Javscript for better performance
விஜயதசமி முன்னிட்டு எழுத்தறிவித்தல் நிகழ்வு- Dinamani

சுடச்சுட

    

    விஜயதசமி முன்னிட்டு திருப்பூரில் அறம் அறக்கட்டளை சார்பில் எழுத்தறிவித்தல் நிகழ்வு வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
    அறம் அறக்கட்டளையுடன் ஸ்ரீ சக்தி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வானது திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில், காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது. இதில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், சென்னையைச் சேர்ந்த பி.ஆர்.மஹாதேவன், சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி, தஞ்சாவூர் பாரதிய இலக்கிய பயிலரங்க நிறுவனர் தஞ்சை வே.கோபாலன், சென்னை தேசிய சிந்தனைக் கழக தலைவர் ம.வே.பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க உள்ளனர்.
    இந்நிகழ்வில் இலவசமாக பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவிற்கு 98422 27505, 91500 86540 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai