Enable Javscript for better performance
அண்ணா அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான மாணவர்கள் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     பள்ளியின் தலைமை ஆசிரியை சு.த.செல்வி இக்கண்காட்சியைத் துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன், என்எஸ்எஸ் அலுவலர் கோ.வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
     வெள்ளக்கோவில், காங்கயம், தாராபுரம், மூலனூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் 28 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் கண்காட்சியில் பங்கேற்றன. மாணவர்கள் மொத்தம் 81 படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
    பீரங்கியில் ஏவுகணை ஏவுதல் போன்று, பாடி ஸ்பிரே மூலம் உருளைக்கிழங்கை ஏவியது, ஹெம்ப்கிரிட் என்கிற தாவர மஞ்சியிலிருந்து தயாரிக்கப்படும் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கட்டடச் செங்கல், காது கேளாதோர், பாட்டு கேட்கும் கருவி போன்ற படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
      தனியார் கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட ஆசிரியர் குழுவினர் நடுவர்களாகச் செயல்பட்டனர். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விவரம்:
    வகுப்பு 6-8: சரண்யா, சுமிதா (நஞ்சியம்பாளையம் பள்ளி), சரண், அசோக்குமார் (கோவிந்தாபுரம்), வினோத், ஆதிசங்கரர் (கோவிந்தாபுரம்).
    வகுப்பு 9-10: கலைவாணி, அம்பிகா (கோவிந்தாபுரம்), கிருத்திகா, சங்கீதா (வெள்ளக்கோவில்), ஹரிஹரன், தமிழமுதன் (பெரமியம்).
    வகுப்பு 11-12: ராஜகோபால் (கோவிந்தாபுரம்), அப்துல்வஜித், ஆரிப்நிவாஸ் (கொளத்துப்பாளையம்), இளங்கோவன் (கோவிந்தாபுரம்).
     இம்மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான அறிவியல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai