Enable Javscript for better performance
அறிவொளி நகரில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அங்குள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, ஊராட்சித் தலைவர் ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ், ஏ.துரைகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    முகாமில், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்த முகாமில் 102 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு 95 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
    இந்நிகழ்ச்சியில், நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் ரவீந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் பிரபு, சந்திரகலா உள்பட பலர் பங்கேற்றனர்.
    கீரனூரில்... : காங்கயம் ஒன்றியம், கீரனூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.காங்கயம் வட்டாட்சியர் வெங்கடலட்சுமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீஷ்குமார், ஒன்றியக் கவுன்சிலர் மணிமேகலை ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். இதில் பெறப்பட்ட 35 மனுக்களுக்கும் உடனடித் தீர்வு காணப்பட்டது. இம்முகாமில், நத்தக்காடையூர் வருவாய் ஆய்வாளர் பி.தங்கவேல், கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai