Enable Javscript for better performance
அவிநாசியில் மர்மக் காய்ச்சல்: சுகாதாரத் துறையினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசியில் மர்மக் காய்ச்சல்: சுகாதாரத் துறையினர் ஆய்வு

    By DIN  |   Published on : 15th October 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி வட்டாரப் பகுதியில் சிலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையடுத்து, சுகாதாரத் துறையினர் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    அவிநாசி வட்டாரத்துக்கு உள்பட்ட அவிநாசி, தெக்கலூர், சேவூர், போத்தம்பாளையம், வேட்டுவபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இதற்கிடையில், தெக்கலூர் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த மணியாள், கெளதம், விக்னேஷ்குமார், ராஜபிரியன் உள்ளிட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர், காய்ச்சலால் பொது மக்கள்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபேட் மருந்து தெளித்ததுடன் துப்புரவுப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார் அவிநாசி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai