Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் இரா.முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளார் கே.எம்.இசாக்,  மாவட்டக் குழு உறுப்பினர் வி.கோபால், இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளார் எம்.அருண், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் என்.விஐயராகவன், கே.எம்.பழனிசாமி, தனிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இதில், காவிரி மேலாண்மைக் குழுவை உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அக்டோபர் 17-ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் ரயில் மறியல் போரட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது. அக்டோபர் 24-ஆம் தேதி முதல் கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பதிவைத்  தொடங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai