Enable Javscript for better performance
இளம் பெண்ணைத் தாக்கியதாக கணவர் உள்பட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தாராபுரம் நகரில் குடும்பத் தகராறில் இளம் பெண்ணைத் தாக்கியதாக கணவர் உள்பட 3 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    தாராபுரம், நாடார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (35). தனியார் பேருந்து ஓட்டுநர். இவரது மனைவி நித்யா (28). இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு அடிக்கடி ஏற்படுமாம்.
      இந்நிலையில், இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை காலை தகராறு ஏற்பட்டு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நித்யா புகார் செய்திருந்தார்.
    இந்நிலையில், புகாரை வாபஸ் பெறக்கூறி செந்தில், அவரது அண்ணன் பழனிச்சாமி, தம்பி குமார் ஆகியோர் நித்யாவைத் தாக்கினார்களாம். இதுகுறித்து நித்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் செந்தில், அவரது சகோதரர்கள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai